பண்பாட்டுப்பாலம்

புலம் பெயர் தேசத்தில் மேல்நாட்டுக் கலாச்சாரத்தின் பார்வையில் தமிழரது கலாச்சாரப்பின்னணி பல சந்தர்ப்பங்களில் புரியப்படாமல் உள்ளது. கலாச்சாரப்பின்னணியைப் புரிவதனால் அதற்கேற்றவாறு ஒருவரது மருத்துவத் தேவைகளை தனித்துவமாக நடைமுறைப்படுத்த முடியும். அதை இந்நாட்டு சுகாதாரத்துறையும் விரும்புகின்றது. ஆகையால் நீங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அல்லது குடும்ப வைத்தியரைச் சந்திக்கும் போது உங்களது கலாச்சாரம் சார்ந்த பின்னணியைக் கூறுவது முக்கியம். உ-ம். நான் சைவம் அல்லது ஒரு பெண்வைத்தியர் என்னைப் பரிசோதிப்பதை விரும்புகின்றேன் எனப்பல. இத்தகைய விடயங்களை நாம் எடுத்துரைத்து எமது கலை, கலாச்சாரப் பின்னணிகளை விளக்கி வருகின்றோம். அந்த வகையில் நலவாழ்வு சுவிஸ் நாட்டு சுகாதாரத்துறை தொடர்பான நிறுவனங்களையும் தமிழ் மக்களையும் இணைக்கும் பாலமாகச் செயற்படுகின்றது.

இதுசார்ந்த அல்லது ஆரோக்கிய வாழ்வு தொடர்பான கேள்விகள் உண்டேல் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
தொலைபேசி: 077 977 86 60, மின்னஞ்சல்: info@nalavalvu.ch